தமிழகம்

ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி மருந்து கடைகளை மூடிவிட்டு வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

ஆன்லைனில் மருந்து விற் பனைக்கு தடை விதிக்கக் கோரி நாடு முழுவதும் கடைகளை அடைத்துவிட்டு மருந்து வணிகர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு அனுமதி வழங்கு வது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்கு மருந்து வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையும் மீறி சில நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில், ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி 13-ம் தேதி நள்ளிரவு முதல் 14-ம் தேதி நள்ளிரவு வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மருந்து வணி கர்கள் அறிவித்தனர். அதன்படி, நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக் கடைகள் நேற்று மூடப்பட்டன.

தமிழகத்தில் சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. இவற் றில் பணியாற்றிய 2 லட்சம் ஊழி யர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

தமிழ்நாடு மருந்து வணிகர் கள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் திருவாரூரிலும், பொதுச்செய லாளர் கே.கே.செல்வன் தலைமை யில் சேலத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் மோகன்குமார், பொதுச்செயலாளர் நடராஜன், பொருளாளர் திருலோகச்சந்தர் ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, 100-க்கும் மேற்பட்ட வணிகர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க பொதுச்செயலாளர் நடராஜன் கூறியதாவது:

ஆன்லைன் மருந்து விற்பனை மிகவும் ஆபத்தானது. உயிர் காக் கும் மருந்துகளை டாக்டர்களின் பரிந்துரை சீட்டுடன் நேரடியாக மருந்துக் கடைகளில் சென்று வாங்குவதுதான் நல்லது. ஆன் லைன் மூலம் மருந்து விற்பனை யைத் தொடங்கினால் போதை மருந்துகள் எளிதாக கிடைக்கும். இதனால் இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு அதிக அளவில் அடிமையாவார்கள். கருக் கலைப்பு மருந்துகளையும் வாங்கி விட முடியும். இவைதவிர காலா வதியான, தரமற்ற மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளும் விற்பனை செய்யப்படும்.

ஆன்லைன் மூலம் மருந்து விற் பனை தொடர்பாக இப்போதுதான் மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஆனால் அனுமதி இல் லாமல் சென்னையில் 2 நிறுவனங் கள் உட்பட நாடு முழுவதும் 20 நிறு வனங்கள் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்து வருகின்றன. தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மருந்து வணிகர்கள் ஆர்ப்பட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். தமிழக அரசு எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. எங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அம்மா மருந்தகங்களில் கூட்டம்

தமிழ்நாடு மருந்து கட்டுப் பாட்டுத் துறை இயக்குநர் அப்துல் காதர் கூறும்போது, ‘‘மருந்து வணிகர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தமிழகம் முழுவதும் மருத்துவ மனைகளில் உள்ள மருந்தகங்கள், கூட்டுறவுத் துறையால் நடத்தப் படும் ‘அம்மா’ மருந்தகங்கள் உள் ளிட்ட சுமார் 4 ஆயிரம் மருந்தகங் கள் திறந்திருந்தன. இவற்றில் பொதுமக்களின் கூட்டம் வழக் கத்தைவிட அதிகமாக இருந்தது” என்றார்.

SCROLL FOR NEXT