தமிழகம்

அன்புமணி தலைமையை ஏற்றால் பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: ராமதாஸ் நிபந்தனை

செய்திப்பிரிவு

அன்புமணி தலைமையை ஏற்றுக்கொண்டால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற ராமதாஸ் பேசியதாவது:

தமிழகத்தில் அரிசி, பருப்பு, நல்லெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது. சாமானிய மக்களுக்கான கூலி, சம்பளம் உயரவில்லை. ஆனால், விலைவாசியோ விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.

விவசாய உற்பத்தி மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதை திராவிடக் கட்சிகளால் சரி செய்ய முடியாது. இதற்கு நேர்மையான ஒரு அரசியல் கட்சி தேவை. ஊழல் இல்லாத ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ், ‘‘மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. அன்புமணி தலைமையை ஏற்றால் பாஜகவை கூட்டணிக்கு வரவேற்போம்’’ என்றார்.

SCROLL FOR NEXT