நாளை முதல் 17-ம் தேதி வரைகடற்கரை, பொழுதுபோக்கு மையங் களில் பாதுகாப்பு பணியில் 2,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர் என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என அடுத்தடுத்த கொண்டாட்டங்கள் இருக்கும். குறிப்பாக காணும் பொங்கலன்று மெரினா, பெசன்ட் நகர் மற்றும் கடற்கரை பகுதிகளிலும் பூங்காக்கள், பொழுது போக்கு மையங்களிலும் கூட்டம் அலை மோதும்.
இந்த ஆண்டு, கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் 17-ம் தேதி வரை மெரினா, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ளஅனைத்து சுற்றுலா இடங்களுக்கும் செல்ல தமிழக அரசுதடை விதித்துள்ளது. இதையடுத்து மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அரசு உத்தரவுப்படி பொது மக்கள் பொழுது போக்கு மையங்களுக்கு செல்ல வேண்டாம். மீறுபவர்கள் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.