தமிழகம்

திருச்சியில் ரூ.53.78 லட்சத்தில் 330 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 330 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.53.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நேற்று வழங்கப் பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் மாற்றுத்தி றனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் 210 பார்வை யற்றவர்கள் மற்றும் காது கேளாத, வாய்பேச இயலா தோருக்கு தலா ரூ.12,799 மதிப்பில் செல்போன்கள், 4 பேருக்கு தலா ரூ.61,955 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 77 பேருக்கு திருமண நிதியுதவி, 7 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம், ஆவின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய நிதியுதவி, ஒருவருக்கு ரூ.7,900 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள் உட்பட மொத்தம் 330 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.53.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் பங் கேற்றனர்.

SCROLL FOR NEXT