நாமக்கல் கோட்டையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை, மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து 1 லட்சத்து 8 வடைமாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு கோட்டை சாலையில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அனைத்து வாகனங்களும் கடைவீதி சாலை மற்றும் பரமத்தி சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன.