தமிழகம்

திருப்பூரில் தீபாவளிக்கு தயாரான பின்னலாடைகள் தேக்கம்

செய்திப்பிரிவு

லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், தீபாவளிக்கு தயாரான பின்னலாடைகள் திருப்பூரில் தேங்கத் தொடங்கியுள்ளன.

சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை, விசைத்தறியில் உற்பத்தியாகும் ஜவுளி வகைகள், கறிக்கோழி, தேங்காய் ஆகியவை திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கோடிக்கணக்கில் தேங்கியுள்ளன.

தென் இந்தியாவில் தீபாவளி, வட இந்தியாவில் துர்கா பூஜை ஆகிய பண்டிகைகள் வர இருப் பதால், 40 சதவீத ஆர்டர் திருப்பூரில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், லாரிகள் வேலைநிறுத்தத்தால், தொழிலாளர்களுக்கு பனியன் நிறுவனங்களில் வேலைநேரம் குறைகிறது. இதனால், தொழிலா ளர்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

சிஸ்மா அமைப்பின் கே.எஸ். பாபுஜி ‘தி இந்து’ விடம் கூறும் போது, ‘‘திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில், ரூ.350 கோடி வர்த்தகம் தேக்கமடைந்துள்ளது. தீபாவளிக்கு தயாரான பின்ன லாடைகள் திருப்பூரில் தேங்கத் தொடங்கியிருப்பதால், தொழில் துறையினரை மிகவும் அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத் தால், வரவு- செலவு உள்ளிட்ட பிரச்சினைகளும் தொழில்துறையினருக்கு ஏற்படும். மத்திய அரசு மெத்தனப்போக்கை தொடர்ந்து கடைபிடிப்பதால், அது நாட்டின் தொழில்துறையை மொத்தமாக பாதிக்கும். இப்பிரச் சினையில் விரைந்து நடவடிக்கை எடுக்க, மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT