சென்னையில் நீர்வழித் தடங்கள் மற்றும் சாலையோர பகுதிகளின் அருகில் வசித்து வந்த குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் உள்ளகுடிசை மாற்று வாரிய குடியிருப்புபகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர்.
அப்பகுதிகளில் பொதுமக்கள் தூய்மையை கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்மற்றும் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில்தூய்மை, கழிவு மேலாண்மை, சுகாதார விழிப்புணர்வு மற்றும் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது.
இதில், அரசு அதிகாரிகள் மதபேதமின்றி அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுடன் ஒன்றுகூடி சுகாதார பொங்கலிட்டனர். தூய்மை தொடர்பாக நடத்தப்பட்ட கோலப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு குடிசை மாற்றுவாரிய நிர்வாக பொறியாளர் சேகர் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.