காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவதை உறுதிப்படுத்தும் வகை யில் ஆளுநருக்கு எதிராக நடத் திய போராட்டத்தை திமுக புறக் கணித்துள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளு நர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி அண்ணா சிலை அருகே முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் போராட்டம் நடந்தது. இக்கூட்டத் தில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என கூட்டணிக் கட்சியினர் பங் கேற்றனர். ஆனால், ஆளும் கட்சியான காங்கிரஸின் பிரதான கூட்டணிக் கட்சியான திமுக இதில் பங்கேற்கவில்லை.
போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்க ளில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தற்போதைய தலை வர் மு.க.ஸ்டாலின், புதுவை திமுக அமைப்பாளர்கள் எஸ்பி.சிவக் குமார், சிவா எம்எல்ஏ ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இதர கூட்டணிக் கட்சியினரை விட திமுகவுக்கு முக்கியத்துவம் தந்துள்ள சூழலிலும் இப்போராட்டத்தை திமுக புறக்கணித்ததன் மூலம் கூட் டணியிலிருந்து விலகுவதை உறுதி செய்துள்ளதாக தொண்டர்கள் கருதுகின்றனர்.
புதுவை காங்கிரஸ் கூட்டணி யில் இடம்பெற்றுள்ள திமுக தொடர்ந்து காங்கிரஸை கடுமை யாக விமர்சித்து வருகிறது. தற்போது துணைநிலை ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி நடத்தும் போராட்டத்தை திமுக புறக்கணித்ததன் மூலம் தனது எண்ணத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளது.