தமிழகம்

செய்யாறு அருகே கொத்தடிமைகளாக பணிபுரிந்த 7 பேர் மீட்பு

செய்திப்பிரிவு

செய்யாறு அருகே கொத்தடிமைகளாக பணிபுரிந்த 7 பேரை வருவாய்த் துறையினர் மீட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள திரும்பூண்டி கிராமத்தில் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பலர் கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாக சார் ஆட்சியர் ஆர்த்திக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வட்டாட்சியர் கோபால் தலைமையிலான குழு நேற்று நேரில் சென்று சோதனை நடத்தியது.

அதில், 3 குடும்பங்களைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 7 பேர் கொத்தடிமைகளாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரியவந்தது. அவர்களுடன் 4 சிறுவர்கள் இருந்தனர். இதையடுத்து, பாடிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி, மல்லிகா, முருகன், அண்ணாமலை, குப்புசாமி, சிறுவர்கள் அப்பு(2), மீனாட்சி(3) மற்றும் கீழ்கொளவேடு கிராமத்தை சேர்ந்த சங்கர், செல்வி, குள்ளன்(3), சுமதி(2) ஆகியோரை வட்டாட்சியர் கோபால் தலைமையிலான குழு மீட்டனர். அவர்களுக்கு முதற்கட்ட நிதி உதவியை வழங்கி சார் ஆட்சியர் ஆர்த்தி வழியனுப்பி வைத்தார்.

SCROLL FOR NEXT