தமிழகம்

காவிரி பிரச்சினை: கோடநாட்டில் இன்று முதல்வரை சந்திக்க திட்டம்- அனைத்து விவசாயிகள் சங்கம் தகவல்

செய்திப்பிரிவு

காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொடநாட்டில் இன்று (அக்டோ பர் 26) சந்தித்துப் பேச திட்ட மிட்டுள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தின் தண்ணீர் உரிமை யைப் பாதுகாக்க விவசாயிகள் போராடி வருகிறோம். இதுதொடர் பாக தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள் ளது. நாங்களும் வழக்கு தொடரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

“தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட தரமுடியாது” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே அணை கட்ட உலக ளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள் ளது. இன்னும் 3 மாதங்களில் அணையின் கட்டுமானப் பணிகளை தொடங்கப்போவ தாகவும் கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கருத்து தெரிவிக்க கர்நாடக முதல்வருக்கு எந்த உரிமையும் இல்லை. ஏனெனில், மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானவுடனேயே, இரு மாநிலத்தில் உள்ள அணைகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. எனவே, கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு, காவிரி பிரச்சினை தொடர்பாக போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது. வரும் டிசம்பர் 8-ல் சென்னையில் நடைபெறவிருந்த உண்ணா விரதப் போராட்டத்தை, நவம் பர் 4-ம் தேதியே நடத்த முடிவு செய்துள்ளோம். இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, ஆதரவு கேட்க உள்ளோம். முன்னதாக, இன்று (அக். 26) தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

போராட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, ஆதரவு கேட்க உள்ளோம்.

SCROLL FOR NEXT