தமிழகம்

அடுத்த 4 நாட்களுக்குப் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்குப் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும். சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜனவரி 8 அன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜனவரி 9 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜனவரி 10 அன்று ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜனவரி 11 அன்று சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்துள்ளது.

அதிகபட்சமாக மேல் மாத்தூர் (கடலூர்) நத்தம் (திண்டுக்கல்) தலா 21 செ.மீ., ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 19 செ.மீ., வேப்பூர் (கடலூர்) 18 செ.மீ., கடையநல்லூர் (கள்ளக்குறிச்சி) 16 செ.மீ., சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 15 செ.மீ., பீளமேடு (கோவை) குடவாசல் (திருவாரூர்) தலா 11 செ.மீ., பூந்தமல்லி (திருவள்ளூர்) 10 செ.மீ.

அரூர் (தருமபுரி) அகரம் சிகூர் (பெரம்பலூர்) ஜெயங்கொண்டம் (அரியலூர்) ராஜபாளையம் (விருதுநகர்) ஆண்டிப்பட்டி (தேனி) தலா 9 செ.மீ., திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) சேலம், விழுப்புரம், புதுச்சேரி, பூண்டி (திருவள்ளூர்) அரவக்குறிச்சி (கரூர்) 8 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT