ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க் கெட்டில் ரூ.10 கோடிக்கு பொருட் கள் விற்பனை செய்யப்பட்டதாக மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆயுதபூஜையை ஒட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை திறக்கப்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இவற்றில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் விற்பனை நடைபெற்றது. அதுமட்டுமல்லாது, பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டுகளிலும் நல்ல வியாபாரம் நடைபெற்றது. மக்கள் வரத்து அதிகரிப்பால் அங்கு கடந்த இரு நாட்களாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க, சாலை யோரம் கடை வைப்போர் சாலையை ஆக்கிரமிக்காமல் இருக்க மார்க்கெட் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் ஏற்படுத்தப் பட்டிருந்தன. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பொரி வியாபாரி ஒருவரிடம் கேட்ட போது, கடந்த ஆண்டு ஆயுத பூஜையின்போது தமிழக அரசியல் சூழல் சரியில்லாமல் இருந்தது. அதனால் சொல்லிக் கொள்ளும்படி, அப்போது வியாபாரம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு அமோக விற்பனை நடைபெற்றது என்றார் அவர்.
இந்த ஆண்டு விற்பனை குறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் வி.ஆர்.சவுந்தரராஜன் கூறிய தாவது: இந்த ஆண்டு கோயம் பேடு மார்க்கெட்டில் அமோக விற்பனை நடைபெற்றது.
பூ மற்றும் பழ மார்க்கெட்டுகளில் வழக்கத்தை விட பலமடங்கு விற்பனை அதிகமாக இருந்தது. சிறப்பு சந்தையில் கடை வைத்தவர்களும் அதிக அளவில் விற்பனை செய்தனர். இப்பண்டிகை அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படும் பண்டிகை.
அதிக மக்கள் வரத்தால் கடந்த 2 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் கடும் போக்கு வரத்து நெரிசல் இருந்து வந்தது.
இந்த ஆண்டு அதிக அளவில் வாழைமரம், வாழைப்பழம், பொரி ஆகியவை விற்பனை யாயின. அதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 3 நாட் களில் ரூ.10 கோடிக்கு பூஜை பொருட்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.