தந்தை, மகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த வழக்கில், நீதிபதி முன் நேற்று 5 பேர் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட் டனர்.
திருப்பூரை அடுத்த மங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட 63 வேலம் பாளையம் பகுதியில், 45 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டது தொடர்பாக மங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், தொடர்புடையவர்களை கண்டு பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் கூறியதாவது: பல்லடம் மாணிக் காபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (எ) சுப்பிரமணி என்பவரிடம், விசைத்தறி பணிபுரியும் பொருட்டு ரூ.60 ஆயிரம் முன் பணம் பெற்று அதை திருப்பி கொடுக்காமல் தங்கவேல் இருந்தாராம். இதனால், கடந்த 5-ம் தேதி தங்கவேலு (45) மற்றும் அவரது மகள் மகாலட்சுமி (11) ஆகியோரை தனது காரில் செல்வம், தெய்வசிகாமணி, நாக ராஜ் மற்றும் ஆனந்தன் ஆகியோர் செல்வத்தின் இடத்துக்கு கடத்தி வந்தனர். தொடர்ந்து, அங்கு தங்க வேலுவை தாக்கியதில் அவர் உயிரிழந்தாராம். அதன்பின், நாக ராஜூம், ஆனந்தனும் அங்கிருந்து சென்றார்கள் என சொல்லப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, செல்வம் மற்றும் தெய்வசிகாமணி ஆகியோர் அருகிலுள்ள பெட்ரோல் பங்கிலி ருந்து ரூ.2 ஆயிரத்துக்கு பெட் ரோல் வாங்கியுள்ளனர். தங்கவேலு வின் சடலம் மற்றும் சிறுமி மகா லட்சுமியை காரில் ஏற்றிகொண்டு, 63 வேலம்பாளையம் காட்டுப் பகுதிக்குச் சென்று தங்கவேலுவை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். தொடர்ந்து, சிறுமியை காரில் அழைத்துக்கொண்டு கோவை மாவட்டம் வடவள்ளியிலுள்ள உறவினர் ரங்கராஜனை செல்வம் சந்தித்துள்ளார்.
சிறுமி கொலை
அங்கு, சிறுமி மகாலட்சுமி ஒட முயற்சிக்கும்போது, ரங்கராஜன் சிறுமியை தாக்கி பலாத்காரம் செய்தாராம். அதன்பின், சிறுமியை இரும்புக் கம்பியால் தலையில் அடித்து இருவரும் சிறுமியை எரித் துக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியின் பிரேத பரிசோதனை யில் சிறுமி உயிருடன் இருக் கும்போதே எரிக்கப்பட்டதாக தெரி விக்கப்பட்டுள்ளது. சிறுமி எரிக் கப்பட்டது தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரட்டைக் கொலை தொடர் பாக விசைத்தறி உரிமையாளர் செல்வம் (43), அவரது நண்பர் தெய்வசிகாமணி (43), நாகராஜ் (27), ஆனந்த் (27) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தக் கொலையில் தொடர்புடைய செல்வத்தின் உறவினரான கோவையை சேர்ந்த ரங்கராஜன் (34) என்பவரை நேற்று முன்தினம் இரவு, தனிப்படை போலீஸார் கைது செய்தனர்” என்றார்.
15 நாள் சிறை
தந்தை மற்றும் மகளை எரித்துக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும், திருப் பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் பல்லடம் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் சிறையில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.