தமிழகம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து: துக்ளக் விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்

செய்திப்பிரிவு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 14-ம் தேதி சென்னை வருவதாக இருந்த நிலையில் அவரது வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. துக்ளக் ஆண்டு விழாவில் அவருக்கு பதிலாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார்.

கடந்த நவம்பர் 21-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழக அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அந்த விழாவில், பேசிய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என அறிவித்தனர். ஆனால், அமித் ஷா பேசும்போது கூட்டணி குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

அதேநாளில் பாஜக மாநிலநிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடன் கட்சி வளர்ச்சி, பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்தினார். மேலும்துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தியும் அமித் ஷாவை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழ்நிலையில், துக்ளக் வார இதழின் 51-வது ஆண்டு விழாஜனவரி 14-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்கமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருவதாகவும், அந்த நேரத்தில் சட்டப்பேரவைதேர்தல் கூட்டணி குறித்து முதல்வர்பழனிசாமி, துணை முதல்வர்ஓபிஎஸ் ஆகியோருடன் ஆலோசித்து கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்துசெய்யப்பட்டு அவருக்கு பதிலாகதுக்ளக் ஆண்டு விழாவில் ஜே.பி.நட்டா கலந்துகொள்ள இருப்பதாக தற்போது தகவல் வெளியாகிஉள்ளது.

SCROLL FOR NEXT