புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கிவைக்க முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மதுரை வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டியினர் இருவரையும் சந்தித்து அழைப்பு விடுக்க உள் ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், அவனி யாபுரத்தில் ஜனவரி 14-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடக்கும். அதற்கு அடுத்தநாள் பாலமேட்டிலும், ஜனவரி 16-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
இந்தப் போட்டிகளைக் காண சர்வதேச அளவில் சுற்றுலாப் பய ணிகள் திரள்வர். இந்தப் போட் டிகளில் உள்ளூர் காளைகள் மட்டு மல்லாது, தமிழகம் முழுவதும் இருந்து காளைகள் பங்கேற்கும். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் பிர முகர்கள் உள்ளிட்டோரின் காளை களும் அவிழ்த்து விடப்படும்.
அலங்காநல்லூரில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிக் கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. உள்ளூர் விழா கமிட்டி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசு அறிவுறுத்திய விதிமுறைகளின் படி போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டைப்போல் உற் சாகம் குறையாமல் இந்த ஆண்டும் போட்டியை நடத்துவதற்காக கார், பைக், பசு மாடு உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுகளை சிறந்த காளைக்கும், மாடுபிடி வீரருக்கும் வழங்க உள்ளனர். இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைக்க முதல்வரும், துணை முதல்வரும் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் ஜே.சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க முதல்வர், துணை முதல்வர் உறுதியாக வரவுள்ளனர். உள்ளூர் அமைச்சர்களின் வழிகாட்டுதலில் முறைப்படி நேரில் சந்தித்து போட்டியைத் தொடங்கி வைக்க வரும்படி அழைப்பு விடுக்க உள்ளோம் என்றார்.
முதல்வரும், துணை முதல் வரும் ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டைத் தொடங்கிவைத்த கையோடு, மதுரையில் அவர்கள் பிரச்சாரத்தைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.