பலத்த கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களை காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆய்வு செய்தார்.
மதுரையில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் விழா நாட்களில் விமரிசையாக நடக்க இருக்கின்றன.
அவனியாபுரத்தில் ஜனவரி 14-ம் தேதி, பாலமேட்டில் ஜனவரி 15-ம் தேதி, அலங்காநல்லூரில் 16-ம் தேதி போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டியைப் பார்வையிட வெளிநாடுகளில் இருந்தும் சுற்று லாப் பயணிகள் வருகை தருவர். இந்த ஆண்டு கரோனா வைரஸ் தாக்கத்தால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பது குறித்து, மாவட்ட நிர்வாகம் எந்த முடிவும் எடுக்கவில்லை. பார்வையாளர்கள் முகக் கவசம் அணிவது, வெப்ப அலகு பரிசோதனை போன்றவை சுகாதாரத் துறையினரால் கண் காணிக்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் காளைகளும், மாடு பிடி வீரர்கள் எண்ணிக்கையும் குறைக்கப் பட்டுள்ளதால் போட்டி முன்பை விட குறைவான நேரம் மட்டுமே நடக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் மற் றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்த பணிகளை, மதுரை மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் சுஜித்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
போட்டி நடக்கும் பாலமேடு, அலங்காநல்லூரில் காளைகள் நிறுத்தப்படும் இடங்கள், பார் வையாளர்கள் அமரும் கேலரி, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் இடங்களை அவர் ஆய்வு செய் தார்.
இதுகுறித்து எஸ்பி கூறுகையில், ‘‘கரோனா பாதிப்பால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டைப் பார் வையிட அனுமதி வழங்கப்பட உள்ளதால் பார்வையாளர்களை முறைப்படுத்தி போட்டி நடைபெறும் இடத்துக்கு அனுப்புவதில் அதிகக் கவனம் செலுத்துவோம்’’ என்றார்.