ஓஎன்ஜிசி அதிகாரிகளைச் சந்திக்க தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளது விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் நேற்று அவர் செய்தி யாளர்களிடம் கூறியது: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக எண்ணெய் மற்றும் இயற்கை வாயு எடுத்து வருகிறது. இதனால், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது டன் கோட்டூர், திருவாரூர், முத்துப் பேட்டை, திருத்துறைப்பூண்டி ஒன்றியங்களில் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. கிடைக்கின்ற தண்ணீரும் குடிநீருக்கோ, விவ சாயத்துக்கோ பயன்படுத்த முடி யாதபடி கடின நீராக மாறிவிட்டது.
மேலும், நிலத்துக்கு அடியில் சக்திவாய்ந்த வெடி பொருட்களை வெடிக்கச் செய்வதால், நில அதிர்வு ஏற்படும் அபாயமும் உள்ளது. விவசாயம் பாதிப்பு, நோய்த் தாக்குதல், தீ விபத்து அபாயம் உள்ளிட்டவற்றால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், டெல்டா பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக முதல்வரைச் சந்திக்க விவசாயி கள் சங்கங்களின் ஒருங்கிணைப் புக் குழு அனுமதி கேட்டது. எனினும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
இதற்கிடையில், தமிழக அரசின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற நோக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வரும் 10-ம் தேதி சந்திக்க ஓஎன்ஜிசி உயரதிகாரிகள் அனுமதி பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது விவசாயிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மரபு ரீதியாக சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தால், இந்த திட்டத்தின் பாதிப்புகளை அவர் களிடம் எடுத்துக் கூறி, திட்டத் துக்கு தற்காலிக தடை விதிப்ப தோடு, பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உயர்நிலைக் குழுவை அமைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை துரிதப்படுத்தவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பி.ஆர்.பாண்டியன்.