விவசாயிகள் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு அளித்துள்ளதாக அக்கட்சிப் பொருளாளர் சுதீஷ் தெரிவித்தார்.
வீரபாண்டி கட்டபொம்மனின் 264-வது பிறந்த நாளுக்காக மதுரையில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்க தேமுதிகவின் கழக துணை செயலாளர் சுதீஷ் மதுரை வந்தார்.
முன்னதாக, விமான நிலையத்தில் பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசியதாவது:
2021 தேர்தலில் தேமுதிக தமிழகத்தில் எத்தனை இடங்களில் போட்டியிடும்?
தேமுதிகவின் நிலைப்பாடு என்பது செயற்குழு பொதுக்குழு கூட்டி தலைமைதான் அறிவிக்கும்.
திமுக தலைவர் ஸ்டாலின் கவர்னரிடம் அளித்த ஊழல் புகார் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
யார் தவறு செய்தார்கள் என்பதை ஆளுநர் ஆராய்ந்து முடிவு எடுப்பார்.
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி உங்களின் நிலைப்பாடு?
தேமுதிக சார்பாக மாநில துணை செயலாளர் மணி நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு எப்போது முடிவாகும்?
தற்போது நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் அதைப் பற்றி பேசுவோம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை எப்போது பார்க்கலாம்?
தேர்தல் நேரங்களில் கண்டிப்பாக கேப்டன் விஜயகாந்தைப் பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.