தமிழகம்

மத்திய அரசிடம் இருந்து ஜிஎஸ்டி நிலுவையை பெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

செய்திப்பிரிவு

நடப்பு நிதியாண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் கரோனா காரணமாக சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.32ஆயிரத்து 172 கோடியாக குறைந்திருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.1 கோடியே 15 லட்சமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம், மத்திய அரசு,மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ளது.

தற்போது வரி வசூல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்துக்கான நிலுவைத் தொகைகளை கேட்டுப் பெறுவது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் மாநில அரசுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.8 ஆயிரம் கோடி வழங்கப்பட வேண்டும். இதைகேட்டபோது, நீங்கள் கடன்வாங்கிக் கொள்ள வேண்டும் எனமத்திய அரசு தெரிவித்தது. அதற்கு, “நீங்களே கடன் வாங்கி எங்களுக்கு அளித்து, கடன் தொகை மற்றும் வட்டியை நீங்களே செலுத்துங்கள்” என்று நாங்கள் கூறியபோது, அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. எனவே, அதில்எந்த பிரச்சினையும் இல்லை. நிலுவைத் தொகையில் எந்த பாதிப்பும் இல்லை. ஐஜிஎஸ்டி தொகையும் நமக்கு வந்துவிட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT