புவனகிரி கடைவீதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் காலை நிதி நிறுவனத்தை திறப்பதற்காக காவலாளி செந்தில்குமார் வந்தபோது அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.இதையடுத்து அவர் போலீஸா ருக்கு தகவல் தெரிவித்தார். சிதம் பரம் டிஎஸ்பி லாமேக், புவனகிரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டிச்செல்வி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது நிதி நிறுவனத்தின் மாடிப்பகுதியில் நிர்வாணமாக அழுகிய நிலையில் பெண் சடலம்கிடந்தது தெரியவந்தது. போலீ ஸார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு அருகே பி.எஸ்.பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்யா (35) என்பதும், அவரது கணவர் ராஜேந்திரன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளதும் தெரியவந்தது.
பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்ததில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவில் சத்யா அந்த இடத்திற்கு வருவதும், முதல் மாடியில் இருந்து ஒருவர் வந்து சத்யாவை அழைத்துச் செல்வதும், பின்னர் இரவு 11 மணிக்கு மேல் அந்த இளைஞர் மட்டும் தனியாக வெளியே செல்வதும் பதிவாகி இருந்தது.
போலீஸார் அந்த இளைஞர் குறித்து தீவிரமாக விசாரித்ததில் அங்குள்ள தனியார் ஜிஎஸ்டிகணக்கு பார்க்கும் அலுவலகத் தில் பணியாற்றும் ஊழியரான ஆயி புரத்தை சேர்ந்த முரசொலிமாறன் (29) என்பது தெரியவந்தது. அவ ரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.
தொடர் விசாரணையில், முரசொலிமாறன் புதுச்சேரியில் வேலை பார்த்தபோது அவருக்கு சத்யாவுடன் தொடர்பு ஏற்பட்டு கூடா நட்பாக மாறியுள்ளது. புதுச்சேரியில் வேலையைவிட்டு புவனகிரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முரசொலிமாறனை சந்திக்க வந்த சத்யாவை அவர் வேலை பார்க்கும் அலுவலக மாடிப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின் னர் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சத்யாவை கொலை செய்துவிட்டு முரசொலிமாறன் தலைமறைவாகியுள்ளது தெரிய வந்தது. முரசொலிமாறனைத் தனிப்படையினர் தேடி வருகின்றனர். தற்போது அவர் திருப் பூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.