வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள். 
தமிழகம்

புத்தாண்டை ஒட்டி வேடந்தாங்கலில் குவிந்த மக்கள்: பறவைகள் சரணாலயம் திறக்கப்படாததால் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆண்டுதோறும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் வழக்கமாக பார்வையாளர்களுக்காகத் திறக்கப்படும். இந்த சரணாலயத்துக்கு பருவகாலங்களில் 18-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இரைக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் 26 வகையான பறவைகள் வரும். இந்த ஆண்டு காலதாமதமாக பருவமழை பெய்ததால் இந்த சரணாலயத்துக்கு பறவைகள் வரத்து தற்போது அதிகரித்து 15 ஆயிரம் பறவைகள் உள்ளன.

‘கரோனா’ அச்சத்தால் 9 மாதங்களாக மூடப்பட்டுள்ள வேடந்தாங்கல் சரணாலயம் இதுவரை திறக்கப்படவில்லை. இருப்பினும் நேற்று புத்தாண்டையொட்டி காஞ்சி, செங்கை, சென்னை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வேடந்தாங்கலுக்கு வந்திருந்தனர். ஆனால், சரணாலயம் திறக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அனுமதிக்காக காத்திருப்பு

இதுகுறித்து வேடந்தாங்கல் வனச் சரக அலுவலர் சுப்பையாவிடம் கேட்டபோது ’சரணாலயத்தைத் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியுள்ளோம். அரசு அனுமதி அறிவித்தவுடன் விரைவில் சரணாலயம் திறக்கப்படும்’ என்றார்.

SCROLL FOR NEXT