தமிழகம்

அனைவரும் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்த முதல்வர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

காந்தி பிறந்த நாளில் அனைவரும் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்துங்கள் என முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

கிராமப்புற நெசவாளர்கள், கைவினைஞர்கள் மூலம் புதிய வடிவமைப்புகளில் தயாரிக்கப்பட்ட கதர் ஆடைகள், கைவினை பொருட்கள் அனைத்து கதர் நிலையங்களிலும் விற்கப்படுகின்றன.

தமிழக அரசு கதர் ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கி வருகிறது. காந்தியடிகள் பிறந்த நாளில், கைவினை பொருட்கள் மற்றும் கதர் ஆடைகளை மாணவர்கள், அரசு ஊழியர்கள் உட்பட அனைவரும் அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT