தமிழகம்

தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து ஆச்சிக்கு அஞ்சலி

செய்திப்பிரிவு

தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து ‘ஆச்சி’ மனோரமாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த மனோரமா உடலுக்கு நேற்று அதிகாலையில் இருந்தே திரையுலகினரும் அரசியல் கட்சித் தலைவர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத், விஜய், தனுஷ், ஜெய், சிவகுமார், பாக்யராஜ், பிரபு, சத்யராஜ், உதயநிதி, மோகன், சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், பார்த்திபன், பாண்டியராஜன், எஸ்.வி.சேகர், விஷால், கார்த்தி, பிரசன்னா, ஆதி, விக்ரம்பிரபு, சாந்தனு, ரகுமான், ராமராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, குண்டு கல்யாணம், மன்சூர் அலிகான், தியாகு, நிழல்கள் ரவி, ராம்கி, சந்திரசேகர், ராஜேஷ், டெல்லி கணேஷ், சூரி, பிரமீடு நடராஜன், தாமு, பவர்ஸ்டார் சீனிவாசன், பாஸ்கி, மன், பிரேம், கஞ்சா கருப்பு உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் மனோரமா உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

நடிகைகள் சரோஜாதேவி, சச்சு, ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஷாலினி, சினேகா, சுகன்யா, கோவை சரளா, ஆர்த்தி, விந்தியா, இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, வசந்த், சுந்தர்.சி, கே.ஆர்., சரண், பேரரசு, டி.பி.கஜேந்திரன், முத்தையா, திரைப்படத் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, அபிராமி ராமநாதன், ஏ.எம்.ரத்னம், ராஜன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, கணேஷ் ஆகியோரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக சார்பில் அமைச்சர்கள் பா.வளர்மதி, செல்லூர் கே.ராஜூ, டி.கே.எம்.சின்னையா, மேயர் சைதை துரைசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் எச்.வசந்தகுமார், கார்த்தி சிதம்பரம், கவிஞர் சினேகன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டோரும் மனோரமா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT