2016 சட்டப்பேரவை தேர்தலை மையப்படுத்தி அரசியல்வாதிகள் மற்றும் தொண்டர்களின் தேவையைக் கருதி வெள்ளக்கோவில் வேஷ்டி, சட்டை வியாபாரிகள் அவர்களின் வீடுகளுக்கே சென்று விற்பனையில் ஈடுபட்டு வருகின் றனர்.
தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி என்றாலும் தற்போதைய சூழலில் அதன் பயன்பாடு குறைந் துள்ளது. குறிப்பாக தமிழக இளைஞர்களில் பெரும்பாலானோர் ஜீன்ஸ் உள்ளிட்ட இதர ஆயத்த ஆடைகளுக்கு மாறிவிட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஜனவரி 5-ம் தேதி வேஷ்டி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வழக்கமாக பேன்ட் உடுத்தும் பலர் அன்றைய தினத்தில் வேஷ்டி அணிந்து அன் றாட வேலைகளுக்குச் செல்கின் றனர்.
இருசக்கர வாகனங்களில் வேஷ்டி அணிந்து செல்லும்போது ஏற்படும் பிரச்சினைகளாலும், செல்போன், பர்ஸ் உள்ளிட்டவற்றை வைக்க பை இல்லாததாலும் வேஷ்டி உடுத்துவது குறைந்துள்ளதாக இளைஞர்கள் தெரிவிக்கின் றனர்.
ஆனால் வேஷ்டியும், கஞ்சி போட்ட மிடுக்கான காட்டன் வெள் ளைச் சட்டையும் இப்போது அர சியல்வாதிகளின் உடையாக மாறி விட்டதால், அதற்கு மீண்டும் மவுசு அதிகரித்துவிட்டது. அண்மைக் காலமாக ஒரு குறிப்பிட்ட பிராண்ட் வேஷ்டி சட்டைகளை உடுத்திவந்த அரசியல்வாதிகளுக்கு, அவர்களது வீடு தேடி வேஷ்டி சட்டைகளை வியாபாரம் செய்து வருகின்றனர் வெள்ளக்கோவில் வேஷ்டி, சட்டை வியாபாரிகள்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக் கோவிலைச் சேர்ந்த வியாபாரி கள் பலர் தற்போது கடலூர், புதுச் சேரி, தஞ்சை, மதுரை, விழுப் புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வீதிவீதியாக விற்பனை செய்து வருகின்றனர். இதுதொடர்பாக கடலூர் மாவட்டத்தில் விற்பனை யி ல் ஈடுபட்டுள்ள வெள்ளக்கோவில் செந்தில்குமார் கூறியது:
அரசியல்வாதிகளின் ஆடை
கடந்த 20 ஆண்டுகளாக நெசவுத் தொழில் செய்துவருகிறோம். வெள்ளக்கோவிலில் பெரும்பாலா னோர் இந்தத் தொழிலைத்தான் செய்துவருகின்றனர். தற்போது அரசியல்வாதிகளின் ஆடையாக இது மாறிவிட்டதால் வெள்ளக் கோவில் வேஷ்டி சட்டைகளுக்கு எப்போதும் கிராக்கி உண்டு.
கடைகளைவிட குறைந்த விலை
மாதத்தில் 15 நாட்கள் ஒவ்வொரு மாவட்டமாக தங்கி, அங்கிருக்கும் வாடிக்கையாளர்களை சந்தித்து வேஷ்டி, சட்டைகளை வழங்கி வருகிறோம். அவர்கள் எங்களிடம் தொடர்ந்து வாங்கக் காரணம் சிறந்த தரம், அதே நேரத்தில் கடைகளில் வாங்கும் விலையைவிட கணிசமாக குறைத்தும் தருகிறோம்.
அடுத்த ஆண்டு தேர்தல் வர விருப்பதால் எங்களுக்கு ஆர்டர் அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எங்களுக்கு ஆதரவு பெருகிவருகிறது. தஞ்சை, மதுரையில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதன் மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடிகிறது. தேர்தல் நெருங்க நெருங்க எங்களது வியாபாரம் சூடு பிடிக்கும். இப்போதே வாரம் ஒருமுறைதான் வெள்ளக்கோவிலில் இருக்கிறோம். அந்த அளவுக்கு எங்களுக்கு ஆர்டர் கிடைக்கிறது.
இருப்பினும் ஒரு குறை என்ன வெனில் இந்த ஆடைகளுக்கான சலவைக் கட்டணம் அதிகரித்து வருவதால் சிலர் தயக்கம் காட்டுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.