கிரண்பேடி: கோப்புப்படம் 
தமிழகம்

உதவியாளருக்கு கரோனா: கிரண்பேடிக்கு 3-வது முறையாகப் பரிசோதனை

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தனி உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியாகி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், கிரண்பேடி மற்றும் ஆளுநர் மாளிகையின் முதல் தளத்தில் பணியாற்றுவோருக்கு கரோனா பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உதவியாளராக ஈஷா அரோரா உள்ளார். இவருக்கு கரோனா தொற்று உறுதியாகி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் ஈஷா அரோரா தங்கியிருந்த முதலாவது தளத்தில் இருந்த கிரண்பேடி மற்றும் ஊழியர்கள் 15 பேருக்கு கரோனா பரிசோதனை இன்று (டிச.30) மாலை ராஜ்நிவாஸ் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஜ்நிவாஸ் தரப்பில் விசாரித்தபோது, "ராஜ்நிவாஸில் பணியாற்றியோருக்கு கரோனா தொற்று வந்ததால் இரு முறை கிரண்பேடி கரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டார். தற்போது அவரது உதவியாளருக்கே தொற்று உறுதியாகியுள்ளதால் மூன்றாவது முறையாக பரிசோதனை செய்துகொண்டார்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT