தமிழகம்

மனிதநேயம் மலர வேண்டுமானால் மதம் கடந்த இறைநம்பிக்கை தேவை: வேதாத்திரி மகரிஷி தத்துவ கருத்தரங்கில் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

உலகில் மனிதநேயம் மலர வேண்டு மானால் மதம் கடந்த இறை நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்று சென்னையில் நடந்த மகரிஷி தத்துவ கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

உலக சமூக சேவா மையம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் ‘பிரபஞ்சத்தின் தோற்றம், வேதாத் திரி மகரிஷியின் தத்துவம்’ தொடர்பான ஒருநாள் கருத்தரங்கு சென்னை கிண்டியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப மையத் தில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை ஆழியாறு உலக சமூக சேவா மையத்தின் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன் தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் இறை தத்துவத்தை எடுத்துச்சொன்னவர் மகரிஷி. இதை அறிவியல் துணை கொண்டு மக்களிடம் கொண்டு போக விரும்பினார். இறைமை என்பது மதம் கடந்த தத்துவம். தற்போது உலக அளவில் பல பிரச்சினைகள் மதம் சார்ந்ததாகவே உள்ளன. இறைவன் பெயரைச் சொல்லிக்கொண்டு மக்களை வெறுக்கக் கூடாது. மனிதநேயம் மலர வேண்டுமானால் மதம் கடந்த இறை நம்பிக்கை ஏற்பட வேண்டும். இறை தத்துவத்தை புரிந்துகொண்டால் சாதி சண்டை கள் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மைய செயல் இயக்குநர் பி.அய்யம்பெருமாள் தலைமை தாங்கிப் பேசும்போது கூறியதாவது:

பால்வெளி வீதியில் கணக்கில் அடங்கா பொருட்கள் உள்ளன. நம்மால் கண்டுபிடிக்கப்பட முடி யாத ஏதேனும் ஒன்றிருந்தால் உடனே அது கடவுள் சக்தி என்று சொல்லிவிடுகிறோம். எல்லா பொருட்களும் ஏன் பூமியை நோக்கி விழுகின்றன என்று ஐசக் நியூட்டன் புதுமையாக யோசிக்கத் தொடங்கினார். புவியீர்ப்பு விசை கண்டுபிடிக்கப்பட்டு அதன் காரண மாக ராக்கெட் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்கள் விஞ்ஞா னப்பூர்வமாக நிரூபிக்கப்படும் போது அவை அறிவியல் விதிகளாக மாறும். இவ்வாறு அய்யம்பெருமாள் கூறினார்.

உலக சமூக சேவா மையத்தின் விஷன் பார் விஸ்டம் திட்ட இயக்குநர் எம்.வி.ரபீந்திரநாத் பேசும்போது, “கடவுள் மீது விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை இல்லை. எல்லா மனிதருக்குள்ளும் இறைவனை தேடும் ஆவல் இருக்கிறது. அந்த சிந்தனையோடுதான் நாம் படைக்கப்பட்டுள்ளோம். மகரிஷி சொன்ன இறை தத்துவம் மனிதர் களின் கஷ்டங்களையும் உலகில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை யும் தீர்க்க வல்லது” என்றார்.

உலக சமூக சேவா மையத்தின் விஷன் அகாடமி இயக்குநர் கே.பெருமாள் கூறும்போது, “இந்த பிரபஞ்சத்தில் 5 சதவீத பொருட்கள் மட்டுமே கண்ணால் பார்க்கக்கூடியவை. எஞ்சிய 95 சதவீதம் கண்களுக்கும் விஞ் ஞானிகளின் கருவிகளுக்கும் எட்டாதவை. மகரிஷி விஞ்ஞான நோக்கில் சொன்ன கருத்துகளை விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் அனு மானங்களை நிரூபிக்க வேண்டு மானால் விஞ்ஞானிகள் ஆதாரங் களைக் கேட்பார்கள்” என்று குறிப் பிட்டார்.

முன்னதாக, அறிவியல் தொழில் நுட்ப மைய துணை இயக்குநர் எஸ்.சவுந்தரராஜபெருமாள் வரவேற் றார். நிறைவாக, அறிவியல் அதிகாரி ஆர்.சீனிவாசன் நன்றி கூறினார். தொடக்க விழாவைத் தொடர்ந்து, பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து சென்னை ஐஐடி இயற்பியல் துறை பேராசிரியர் ப்ரோபுல்ல குமார் பெகரா, கணிதவியல் நிறு வன பேராசிரியர் ஷிகாரி கோபால கிருஷ்ணா ஆகியோர் உரை யாற்றினர்.

SCROLL FOR NEXT