வரும் தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து சுமார் 20 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்ட மிட்டுள்ளது.
கடந்த ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, ரயில் களில் டிக்கெட்களை முன் முன்பதிவு செய்யும் காலம் 60 நாட்களிலிருந்து 120 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 120 நாட்களுக்கு முன்பே விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஏற்பட்டுள்ளது.
இதனால் தென் மாவட்டங் களுக்கு வழக்கமாக இயக்கப் படும் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. சிறப்பு ரயில் களுக்காக பொதுமக்கள் காத்திருக் கின்றனர். இந்நிலையில், சென்னையில் இருந்து கோவை, நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு இடங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டில் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து 20க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கலாம்’’ என்றனர்.