காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கிடக்கும் இறை உருவ சிற்பங்களுடன் கூடிய சிலைகள். 
தமிழகம்

காஞ்சியில் கழிவுநீர் கால்வாயில் கிடக்கும் சிற்பங்களுடன் கூடிய கல் தூண்கள்: முதல்வர், காஞ்சிபுரம் ஆட்சியருக்கு மக்கள் புகார் மனு

செய்திப்பிரிவு

கோயில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் மரபுக் கட்டிடக் கலையில் பிரசித்திப் பெற்ற கல் தூண்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், காஞ்சிபுரம் பெரு நகராட்சி வார்டு 2-க்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை துணை மின்நிலையம் பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் சிற்ப வேலைப்பாடுடன் கூடிய கல் தூண்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.

இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் பலர், அந்த தூண்களை மீட்டு, அவை எந்தக் கோயில் தூண் என்பதை கண்டறிந்து பாதுகாக்க வேண்டும் என்று தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

மனு அளித்த பக்தர்களில் ஒருவரானடில்லிபாபு கூறும்போது, "அந்த தூண்களில் சிவலிங்கம் மற்றும் பல உருவங்கள் உள்ளன. வரலாற்று பொக்கிஷங்களாக பாதுகாக்க வேண்டிய தூண்கள்கேட்பாரற்ற நிலையில் கிடப்பது மிகவும் வேதனைக்குரியது. அந்தப் பகுதியில் ஏதேனும் கோயில்கள், மண்டபங்கள் இருந்ததா என்று விசாரிக்க வேண்டும். ஏகாம்பரநாதர் கோயிலில்பல்வேறு கல்தூண்கள் காணாமல் போயுள்ளன. இந்த தூண்கள் அவையாகவும் கூட இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதைஆய்வுக்கு உட்படுத்தினால் உண்மை நிலை தெரிய வரும்" என்றார்.

SCROLL FOR NEXT