ராஜபாளையத்தில் பெண்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார் பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினரும், ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி பாஜக பொறுப்பாளருமான நடிகை கவுதமி. 
தமிழகம்

சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவில்லையெனில் பாஜக சார்பில் மாபெரும் போராட்டம்: நடத்தப்படும் நடிகை கவுதமி பேட்டி

செய்திப்பிரிவு

ராஜபாளையத்தில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவில்லையெனில் பாஜக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினரும், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக பொறுப்பாளருமான நடிகை கவுதமி கூறினார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த கவுதமி, பின்னர் ராஜபாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகளை பார்வையிட்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டி: ராஜபாளையத்தில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நிதி ஒதுக்கப்பட்ட பின்னரும் காலம் தாழ்த்துவது சரியல்ல. பணிகளை விரைந்து முடிக்கவில்லை எனில் பாஜக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். மக்கள் பணி செய்யத் தவறியவர்கள் மீண்டும் போட்டியிட நினைப்பது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெண்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்களிடம் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

          
SCROLL FOR NEXT