திருச்சி சஞ்சீவி நகர் சர்வீஸ் சாலையில் எதிரெதிர் திசையில் இயக் கப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சாலையை 2 மீட்டர் அள வுக்கு விரிவாக்கம் செய்து இரு வழிப்பாதையாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து காவிரிக்கரை வழி யாக செல்லும் வாகனங்கள், காவிரி பாலத்தின் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையுடன் இணையுமிடத்தில் போதிய சாலை வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை. இதனால், இந்த வாகனங்கள் ஓயாமரி அருகிலேயே எதிர் திசை சாலைக்குச் சென்று, அங்கிருந்து சஞ்சீவி நகர் சந்திப்பு வரை அவ்வாறே செல்வதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.
சாலையில் வழிகாட்டும் அம்புக்குறி
இதைத்தவிர்க்க காவிரிக்கரை சாலையுடன் சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தி லுள்ள மையத்தடுப்பில் பிரிவு சாலை ஏற்படுத்தி சஞ்சீவி நகர் வரை செல்ல அனுமதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் பரிசோதனை முயற்சியாக இருசக்கர வாகனங்கள் மட்டும் சஞ்சீவி நகர் சாலைக்கு திரும்பும் வகையில் அங்கிருந்து மையத்தடுப்பில் வழி ஏற்படுத்தப் பட்டது.
இவ்வழியாகச் செல்லக்கூடிய வாகனங்கள் சஞ்சீவி நகர் வரை, தேசிய நெடுஞ்சாலையையொட்டி சர்வீஸ் சாலையின் இடது புற மாகவே செல்லும் வகையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலையில் ஆங்காங்கே அம்புக்குறி வரையப்பட்டது. ஆனால் அதை கடைபிடிப்பதில் வாகன ஓட்டிகளிடம் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.
போக்குவரத்து போலீஸார் அறிவுறுத்தல்படி சிலர் இச்சாலையில் இடது புறம் சென்றாலும், ஓயாமரியிலிருந்து எதிர்திசையி லேயே வாகனங்களில் வரக்கூடிய பலர் சஞ்சீவி நகர் நோக்கி தொடர்ந்து வலதுபுறமாகவே செல்கின்றனர். இதனால் சஞ்சீவி நகரிலிருந்து சத்திரம் நோக்கி வருவோர் குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க போக்குவரத்து போலீஸார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.
போலீஸாரை நியமிக்க வேண்டும்
இதுகுறித்து திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு உறுப்பி னர் எம்.சேகரன் கூறும்போது, ‘‘காவிரி பாலத்தின் அருகே மையத்தடுப்பில் தற்போது இருசக் கர வாகனம் செல்லக்கூடிய அள வுக்கான பாதையை, கார்கள் செல்லக்கூடிய வகையில் அகல மாக்க வேண்டும்.
அதன்பின் அங்கிருந்து சஞ்சீவி நகர் வரை அனைத்து வாகனங்களும் இடது புறத்தில் மட்டுமே செல்வதை உறுதிபடுத் துவதற்காக, அங்கு போக்கு வரத்து போலீஸாரை பணிக்கு நியமிக்க வேண்டும். ஓயாமரி வழியாக சஞ்சீவி நகருக்கு எதிர் திசையில் செல்ல எந்த வாக னத்துக்கும் அனுமதி தரக்கூடாது’’ என்றார்.
2 மீ விரிவுபடுத்த வேண்டும்
இதுகுறித்து சாலை பயனீட்டா ளர் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன் கூறும்போது, ‘‘சஞ்சீவி நகரில் இருந்து காவிரி பாலம் வரை சாலையை சுமார் 2 மீட்டர் தூரத்துக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு சஞ்சீவி நகரிலி ருந்து செல்வோருக்கும், காவிரி பாலத்திலிருந்து வருவோருக்கும் மையத் தடுப்புடன் தனித்தனி பாதைகளை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே விபத்துகளை குறைக்க முடியும்’’ என்றார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘இச்சாலையை 2 மீ விரிவாக்கம் செய்து தருமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். சாலை விரிவாக்கம் செய்து விட்டால், இப்பிரச்சி னைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதுவரை இங்கு விபத்து ஏற்ப டாமல் தடுக்கவும், வழித் தடங் களை ஒழுங்குபடுத்தவும் காவலர் களை நியமித்து, கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.