ரங்கம் ராஜகோபுரம் பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். 
தமிழகம்

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி உறுதி: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

செய்திப்பிரிவு

வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறுவது உறுதி என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த அவர், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசியது: தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்து பல கோடிகளை சேர்த்து வைத்துள்ளனர். இது தொடர்பான ஊழல் பட்டியல் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சிபிஐயிடம் உள்ளது. அதை வைத்து மிரட்டுகின்றனர். ரங்கம் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள அமைச்சர் வளர்மதியால் இந்த தொகுதிக்கு எந்த நல்லதும் நடைபெறவில்லை.

முதல்வர் பழனிசாமி எந்த தொகுதியில் நின்றாலும் தோற்க டிப்போம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

இதேபோல உழவர் சந்தை, தென்னூர், உய்யக்கொண்டான் வாய்க்கால், சோமரசம்பேட்டை, குழுமணி, ஜீயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று திமுக வுக்கு ஆதரவு திரட்டினார்.

SCROLL FOR NEXT