ஜி.கே.வாசன்: கோப்புப்படம் 
தமிழகம்

ரஜினிகாந்த் அரசியல் நிலை ஏற்புடையது: நல்லவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்; ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

ரஜினிகாந்த்தின் அரசியல் நிலை ஏற்புடையது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

'உடல்நிலை கருதி அரசியலுக்கு வரவில்லை' என்று ரஜினிகாந்த் இன்று (டிச. 29) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

"ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும். அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதற்கு தமிழகத்தில் எதிர்பார்ப்பு இருந்தது. இன்று தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி கட்சி ஆரம்பிக்கவில்லை. காரணம் தனது உடல்நிலை குறித்து மிகுந்த அக்கறை காட்ட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். உடல் நலம் என்பது அனைவருக்கும் பொருந்தும். ரஜினி இவ்வாறு அக்கறை எடுத்திருப்பது ஏற்புடையது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அரசியல் ரீதியாக அதிமுகவின் கூட்டணியில் இருக்கிறோம். தொடர்ந்து பத்து வருட காலமாக அதிமுக அரசு தமிழக வளர்ச்சி பணிகளில் சிறப்புடன் பணியாற்றி கொண்டிருக்கிறது. எனவே, ரஜினிகாந்த் போன்றவர்கள் மக்கள் நலம் கருதி நல்லவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விருப்பம்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT