விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பட்டா வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக விஏஓ ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டார்.
வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி தேவர் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் தனக்குச் சொந்தமான காலி இடத்திற்கு பட்டா கோரி விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
பட்டாசு வழங்குவதற்காக அங்கு கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வரும் சிவராமலிங்கம் (51) என்பவர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மகேந்திரன் இதுகுறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதையடுத்து, வ.புதுப்பட்டி விஏஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, பட்டா வழங்க மகேந்திரனிடம் ரூ.3 லஞ்சம் வாங்கியபோது விஏஓ சிவராமலிங்கத்தை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கைதுசெய்தனர்.