தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக் கூட்டம் 
தமிழகம்

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம்

இ.மணிகண்டன்

விருதுநகரில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை தொடங்கியது.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ளன. 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்" என்ற தலைப்பில் திமுகவினர் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பிரச்சாரத்தை தொடங்கியதுடன் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2021-க்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம் விருதுநகரில் இன்று (டிச. 29) காலை தொடங்கியது. திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா எம்.பி., கட்சியின் செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் பங்கேற்று திமுகவினரிடையே கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இதில், விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கைக்கான தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ, தனுஷ் குமார் எம்.பி., விருதுநகர் எம்எல்ஏ சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT