தமிழகம்

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுடன் இணைந்த டாஸ்மாக் பார்கள் இன்று முதல் திறப்பு

செய்திப்பிரிவு

டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களை இன்று முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்ப் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. அதற்கு முன்னரே மார்ச் 17-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடையுடன் இணைந்த அனைத்து பார்களையும் மூட டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி அனைத்து பார்களும் மூடப்பட்டன.

ஊரடங்கில் தளர்வுகள் அறி விக்கப்பட்ட நிலையில், தற்போது மதுபானக்கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், நோய்க் கட்டுப் பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் மது பானக்கடைகளுடன் இணைந்த பார்களை இன்று முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறை களும் வெளியிடப்பட்டுள்ளன.

பார் பணியாளர்கள் ஒவ்வொரு வரும் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பாருக்குள் இருக்கும் அனைத்து நேரமும் முகக்கவசம் அணிவது கட்டாயம். சோப்பு அல்லது கைகழுவும் திரவம் கொண்டு கைகழுவ வேண்டும். எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

பாருக்கு வருபவர்களுக்கு 50 சதவீதம் இருக்கைகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சமூக இடைவெளி விட்டு வரிசை அடிப் படையில் பாருக்குள் வந்து செல்ல வேண்டும். பாரின் வாயில் பகுதியில் கைகழுவும் திரவம் தரப்படுவதுடன், வெப்பநிலை பரிசோதனை செய்வதும் அவசிய மாகும். வாடிக்கையாளர்களின் பெயர், விவரங்களை பார் ஒப்பந்த தாரர்கள் பெற்று கட்டாயமாக பராமரிக்க வேண்டும். பார் பணியாளர்கள் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.

பாரின் உள்ளே நுழையவும், வெளியில் வரவும் தனித்தனியான வாயில்கள் அமைக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் பாரின் உள் பகுதியில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிவறைகளும் முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT