தமிழகம்

25 ஆண்டுகளாக இடுக்கியை சுமந்த பெண்: அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

செய்திப்பிரிவு

அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக வயிற்றுக்குள் இடுக்கி வைக்கப்பட்டது தெரியாமல் 25 ஆண்டு அவதிப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவும், தவறிழைத்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி இந்திராணி. இவருக்கு 1981-ல் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 11.10.1989-ல் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன் பிறகும் அவருக்கு வயிற்றுவலி குறையவில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றபோதிலும் வயிறு வலி குறையவில்லை.

இதனால் 2013-ல் இந்திரா ணிக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சோதனை யில் அவரது வயிற்றில் அறு வைசிகிச்சையின் போது மருத் துவர்கள் பயன் படுத்தும் இடுக்கி போன்ற கருவி (Forceps) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்திராணி 3.6.2013-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உடனடியாக இந்திராணியின் வயிற்றில் உள்ள இடுக்கியை அறுவை சிகிச்சை மூலம் அகற் றுமாறு உத்தரவிட்டார்.

பின்னர் இந்திராணிக்கு 12.6.2013-ல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு அவரது வயிற்றில் இருந்த இடுக்கி வெளியே எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆர்.மகாதேவன் முன் நடைபெற்றது. அப்போது அரசு மருத்துவமனை சார்பில், ‘மனுதாரர் அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர் சிகிச்சை மேற்கொள்ளவில்லை. வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார். இந்த தவறுக்கு மனுதாரரே காரணம். இதனால் அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கும் கருத்தை ஏற்க முடியாது. மனுதாரருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இருப்பினும் மனுதாரர் இழப்பீடு கேட்டு இதுவரை மனு அளிக்கவில்லை. அவர் இழப்பீடு கேட்டு மனு அளித்தால், அவரது மனுவை பரிசீலித்து இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த இழப்பீட்டு பணத்தை மனுதாரரின் வயிற்றில் இடுக் கியை வைத்து தவறிழைத்த மருத்துவக் குழுவிடம் திரும்ப வசூல் செய்யலாம்.

தவறு செய்த மருத்துவ குழு மீது துறை ரீதியாகவும், சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

          
SCROLL FOR NEXT