புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி உழவர்கரை நகராட்சியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். 
தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலை நடத்துக: நகராட்சியை முற்றுகையிட்டு புதுவை பாஜகவினர் போராட்டம்

செ.ஞானபிரகாஷ்

உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரியும், பிரதமர் மோடியை விவாதத்துக்கு அழைத்து முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்ததைக் கண்டித்தும், புதுச்சேரியில் உழவர்கரை நகராட்சியை முற்றுகையிட்டு பாஜகவினர் இன்று போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் குற்றம்சாட்டி இருந்தார். இதற்குப் பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததற்குத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிதான் காரணம் என்றுகூறி, ஜனநாயகம் பற்றிப் பேசும் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்கத் தயாரா என்று சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரியும், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் பிரதமரை விவாதத்திற்கு அழைத்த முதல்வர் நாராயணசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியும் பாஜக இன்று போராட்டம் நடத்தியது.

பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் 100க்கும் மேற்பட்ட கட்சியினர், உழவர்கரை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்கள் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

SCROLL FOR NEXT