தமிழகம்

கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் கைது: காவல் ஆணையர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

அரசின் தடை உத்தரவை மீறி கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

கரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து தொற்று பரவல் கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் உருமாறிய கரோனா தொற்று அச்சுறுத்திவருகிறது. அது தமிழகத்தில் பரவிவிடாதவாறு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முடிவுசெய்துள்ளனர். அதன்படி, தடையை மீறி கடற்கரை, நட்சத்திர விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், பைக் ரேஸில் ஈடுபடுபவர்களையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT