கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏற்காடு களைகட்டியது.
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையுடன் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையும் இணைந்து வந்ததால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் வருகை கடந்த 3 நாட்களாக ஏற்காட்டில் அதிகரித்து இருந்தது.
ஏற்காட்டில் மழையின்றி வறண்ட வானிலை இருந்தபோதும், குளிர்ந்த சூழல் நிலவியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். தோட்டக் கலைத் துறை பூங்காக்கள், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட் உள்ளிட்ட காட்சி முனைப்பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டினர்.
இதுதொடர்பாக பயணிகள் கூறியதாவது:
கிறிஸ்துமஸ் தொடர் விடு முறையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏற்காடு வந்துள்ளோம்.
இங்கு இதமான வெயில், குளிர்ச்சியான காற்று, பசுமையான சூழல் என அனைத்தும் மனதை மகிழ்விக்கும் வகையில் உள்ளது” என்றனர்.