தமிழகம்

2021-ல் ஹெச்.ராஜாவை தமிழக அமைச்சராக்குவோம்: அண்ணாமலை

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேர்தல் ஆயத்தப் பணி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

விவசாயிகளை 60 ஆண்டுகளாக கூன் போட்டு நிற்க வைத்தது காங்கிரஸ் ஆட்சி. புதிய வேளாண் சட்டங்களில் எக்காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது. அரசியல் அடிப்படை புரிதல் இல்லாமல் பேசி வருகிறார் ஸ்டாலின். அவர் தலைவராக இருக்கும் திமுக வரும் தேர்தலில் காணாமல் போகும். 2021-ம் ஆண்டு தேர்தலில் ஹெச்.ராஜாவை எம்எல்ஏவாக்கி தமிழக அமைச்சராக்க உள்ளோம். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் பாஜக கைகாட்டும் நபர்களே எம்எல்ஏ ஆவார்கள். மாநிலத் தலைவர் முருகன், முதல்வர் வேட்பாளர் குறித்து கூறிய கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளரை எங்களது தேசிய தலைமை முறைப்படி அறிவிக்கும் என்றார்.

SCROLL FOR NEXT