காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற பாஜக.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி. உடன் பாஜக நிர்வாகிகள். 
தமிழகம்

காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரரிடம் பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஆசி

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை, தமிழக தேர்தலுக்கான பாஜகவின் இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.

தமிழக தேர்தலுக்கான பாஜகவின் இணைப்பொறுப்பாளரான பி.சுதாகர் ரெட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவரின் அதிஷ்டானத்துக்கு வந்திருந்து தரிசனம் செய்தார். பின்னர் அவர் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

இதுகுறித்து பி.சுதாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது, “உலகம் முழுவதும் உள்ள மக்கள், கரோனா தொற்றின் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக காமாட்சி அம்மனிடம் வேண்டிக் கொண்டேன்” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது, பாஜகவின் மாவட்டத் தலைவர் கே.எஸ்.பாபு,துணைத் தலைவர்கள் ஓம்.சக்திபெருமாள், அமைப்பு சாரா தொழிலாளர் நலப் பிரிவின் மாநில செயலர் டி.கணேசன், மாவட்ட இளைஞர் அணியின் செயலர் ஜானகிராமன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT