தமிழகம்

அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதா? - நடிகர் ராதாரவி சந்தேகம்

செய்திப்பிரிவு

அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதா என்பதை டெல்லி தலைமைதான் கூற வேண்டும் என பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினரும், நடிகருமான ராதாரவி தெரிவித்தார்.

காரைக்குடியில், அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட் பாளர் குறித்து பேசும் குஷ்பு போன்றவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். அவர்கள் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள். தமிழ கத்தை கருணாநிதி அடகு வைத்து விட்டார் போல. அதனால்தான் ஸ்டாலின் தமிழகத்தை மீட்போம் எனக் கூறி வருகிறார். அதிமுகவை குறை கூற திமுகவுக்கு அருகதை இல்லை. ஊழலின் சாம்ராஜ்யமே திமுக தான்.

வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகப் போராடுபவர்களில் 75 சத வீதம் பேர் தரகர்கள். டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் சீனா, பாகிஸ்தானின் தூண்டுதல் உள்ளது. திமுகவில் 30 ஆண்டு களுக்கும் மேலாக முட்டாளாக இருந்து விட்டேன். தற்போது தான் எனக்கு புத்தி வந்தது. நாம் தமிழர் கட்சி சீமான் நேரத்துக்கு தகுந்தாற்போல் பேசி வருகிறார்.

பாஜக இரண்டாம் கட்ட தலைவர்கள் என்ன பேசினாலும், அதிமுக பெருந்தன்மையாக தற்போது வரை பாஜக உடன் தான் கூட்டணி என்று கூறி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதா? இல்லையா? என்பதை டெல்லி தலைமைதான் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT