தமிழகம்

ரஜினி, கமல் கட்சிகளால் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை: முத்தரசன்

செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக அதிக இடங்களைப் பிடித்து சட்டப்பேரவைக்குள் நுழைய முயற்சிக்கிறது. அது நடக்காது. தி.மு.க. கூட்டணியே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ரஜினி, கமல் கட்சிகளால் தி.மு.க. கூட்டணிக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக நடைபெறும். தேர்தல் நேரத்தில் அதுகுறித்து முடிவு செய்யப்படும்.

கரோனா நேரத்தில் மக்கள் பொருளாதாரரீதியில் பெரும் சிரமத்துக்குள்ளானபோது மாநில அரசு ரூ.5,000-மும், மத்திய அரசு ரூ.7,500-மும் வழக்கக் கோரி பலரும் கோரிக்கை வைத்தனர். ஆனால், தேர்தலை மனதில் வைத்து தமிழக அரசு பொங்கலுக்கு ரூ.2,500 வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT