தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று பூக்களை தரம் பிரிக்கும் வியாபாரிகள். 
தமிழகம்

தோவாளையில் பூக்கள் விலை கடும் உயர்வு: மல்லிகை ரூ. 3,000, பிச்சி ரூ.2,000-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச் சந்தையில் கடந்த 4 நாட்களாக பூக்கள் விலை கடும் ஏற்றம் அடைந்துள்ளது. தோவாளை, செண்பகராமன்புதூர், பண்டாரபுரம், ஆரல்வாய்மொழி, ராதாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மலர்த் தோட்டங்களில் பனிப்பொழிவால் பூக்கள் மொட்டிலேயே கரிந்து விடுகின்றன. இதனால், பூக்கள் மகசூல் மிகவும் குறைந்து வழக்கமான அளவில் நான்கில் ஒருபங்கு பூக்கள் கூட சந்தைக்கு வரவில்லை.

மதுரை, சத்தியமங்கலம், திண்டுக்கல், ஓசூர், உதகை, பெங்களூருவில் இருந்தும் மிகவும் குறைவான அளவே பூக்கள் வருகின்றன. இதனால், விலை பன்மடங்கு அதிகரித்தது. மல்லிகை பூ 15 முதல் 25 கிலோவுக்குள் மட்டுமே கிடைக்கிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று கடும் தட்டுப்பாடு நிலவியது. ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.3,000-க்கு மேல் விற்றது. காலை 9 மணிக்குள் மல்லிகைப் பூக்கள் விற்றுத் தீர்ந்தன. முந்தைய தினம் ரூ.750-க்கு விற்ற பிச்சிப்பூ நேற்று 2,000 ரூபாயாக உயர்ந்தது. அரளி 240, வாடாமல்லி 100, கோழிகொண்டை 100, கிரேந்தி 140 ரூபாய்க்கு விற்பனையானது. பனிப்பொழிவால் புத்தாண்டு வரை பூக்கள் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT