திருவண்ணாமலையில் நேற்று பொதுமக்களுடன் கலந்துரையாடிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. 
தமிழகம்

பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் பட்டினி சாவு ஏற்படும்: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களால் பட்டினி சாவு ஏற்படும் என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப் பில் பொதுமக்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சி திருவண்ணாமலை யில் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள், பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 29 நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால், மோடி அரசு கொண்டு வந்துள்ள கொடுமையான வேளாண் சட்டங் களை, பச்சை துண்டு போட்ட முதல்வர் பழனிசாமி எதிர்த்தாரா? தட்டிக் கேட்டாரா?

வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் 39 பேரும் எதிர்த்தோம். ஆனால், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரன் ஆதரித்தார். இந்த சட்டங்கள் மூலம் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் கொள்முதல் செய்யும் உணவுப் பொருட்களை பதுக்கி வைப்பார்கள். அப்போது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும், பஞ்சம் ஏற்படும், பட்டினி சாவுகள் ஏற்படும்.

‘நீட்' தேர்வுக்கு எதிராக இயற்றப் பட்ட சட்டத்தை மோடி அரசாங்கம் நிராகரித்தது. குடியுரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் திமுக கடுமையாக எதிர்த்தது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர் களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்தை பழனிசாமி ஆதரித்தார்.

விவசாயிகளை வஞ்சித்தது, வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கியது, சட்டம்-ஒழுங்கை சீர் குலைத்தது, அரசின் கஜானாவை சுரண்டியது, கல்வி மற்றும் சுகாதாரத்தை தரம் இழக்க செய்தது, பெண்களின் உரிமை களை பறித்தது, தமிழர்களின் பெருமைகளை சீரழித்தது போன்ற காரணங்களால் அதிமுகவை நிராகரிக்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT