தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை: வானிலை ஆய்வு மையம் 

செய்திப்பிரிவு

வடகிழக்குப் பருவமழை முடிவடையாத நிலையில், தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

''28.12.2020 அன்று தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

சின்னக்கல்லாறு (கோவை) 4 செ.மீ., வால்பாறை (கோவை) 3 செ.மீ., சின்கோனா (கோவை) 2 செ.மீ., சோலையாறு (கோவை), சித்தாறு (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகளில் ஏதுமில்லை.

டிசம்பர் 24, 25ஆம் தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT