தமிழகம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

எஸ்.ஸ்ரீனிவாசகன்

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

தமிழக பாஜக சார்பில் 1000 இடங்களில் விவசாயிகளை சந்தித்து வேளாண் திருத்தச் சட்டங்களின் பலன்களை விளக்கபட்டு வருகிறது. நாளை இரண்டாம் கட்டமாக விவசாய ஊக்கத் தொகை வங்கிகள் மூலம் நேரடியாக ரூ.2000 வழங்கபட உள்ளது.

தமிழகத்தில் திமுகவின் வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றி அடையவில்லை. திமுக ஆட்சியின்போது 42-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தபட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக விவசாயிகளுக்கு சாதகமாகும் வகையில் விளைபொருட்களை எந்தப் பகுதியிலும் விற்பனை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இன்றைக்கு வேறுவிதமாக பேசி வருகிறார்.

எஸ்ரா சற்குணம் ஒரு பாதிரியார். அவர் இறைவனுக்கு தொண்டாற்ற வேண்டும். ஆனால், அவர் அதை விடுத்து திமுக கூட்டங்களில் மோடியை ஒருமையில் பேசி வருகிறார். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அவர் மீது காவல்துறையினர் உரிய நடைவெடிக்கை மேற்கொள் வேண்டும் இல்லை என்றால் பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 என்பது பொங்கல் திருநாளை தமிழக மக்கள் கரோனாவிற்குப் பிறகு எந்த இடையூறும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்பதற்காக வழங்கப்பட உள்ளது. அதனை வரவேற்கிறேன். முதல்வருக்கு நன்றி கூறுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT