புதுச்சேரி கோரிமேடு ஐஆர்பிஎன் காவலர் பயிற்சி மையத்தில் காவலர்களுக்கான சலுகை விலையிலான பல்பொருள் அங்காடியை முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் டிஜிபி பாலாஜி வத்சவா, ஏடிஜிபி அனந்தமோகன் ஆகியோர் உள்ளனர். படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

புதுச்சேரி போலீஸாருக்கு மானிய விலையில் மளிகைப் பொருட்கள்: கோரிமேட்டில் சிறப்பு கேண்டீன் திறப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் பணியாற்றும் போலீஸாரின் குடும்பத்தினருக்கு மானியவிலையில் பொருட்கள் வழங்குவ தற்கான மத்திய போலீஸ் கேண் டீன் திறக்கப்பட்டுள்ளது.

பணமில்லா பரிவர்த்தனை

நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கேண்டீன் இயங்கும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படும். இங்கு பணமில்லா பரிவர்த்தனை மூலம் மட்டுமே பொருட்கள் விற்பனை செய்யப்படும். போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய புகைப்படம் இடம் பெற்றிருக்கும்.

அதில் உள்ள நபர்கள் யார் வேண்டுமொனாலும் வந்து பொருட்களை வாங்கலாம் புதுச்சேரி காவல் துறை சார்பில் போலீஸாருக்கு மானிய விலையில் பொருட்கள் வழங்குவதற்கான மத்திய போலீஸ் கேண்டீன் திறப்புவிழா கோரிமேட்டில் உள்ள ஐஆர் பிஎன் வளாகத்தில் நேற்று நடந்தது. டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா தலைமை தாங்கினார். ஏடிஜிபி ஆனந்த மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு, போலீஸாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார்.தொடர்ந்து, மத்திய போலீஸ் கேண்டீனை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதுகுறித்து ஐஆர்பிஎன் துணைகமாண்டன்ட் வம்சித ரெட்டி கூறுகையில், “மத்திய உள்துறை அமைச் சகத்தின் மூலம் கடந்த 2006ம் ஆண்டு மத்திய போலீஸ் கேண்டீன் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 119 மாஸ்டர் கேண்டீன்களும், 1,700க்கும் மேற்பட்ட போலீஸ் கேண்டீன்களும் இயங்கி வருகின்றன. புதுச்சேரியில் முதன் முறையாக திறக்கப்பட்டுள்ள மத்திய போலீஸ் கேண்டீனுக்கான மளிகை உள்ளிட்ட பொருட்கள் சென்னையில் உள்ள மாஸ்டர் கேண்டீனில் இருந்து வரும்.

தொடக்கமாக ரூ.3.5 லட்சத் துக்கான பொருட்கள் கேண்டீனுக்கு வந்துள்ளது. மொத்தமாக ரூ.26 லட்சம் மதிப்பில் மொத்தம் 49 ஆயிரம் பொருட்கள் வரவுள்ளன. இங்கு 30 முதல் 40 சதவீத மானிய விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படும். காவல்துறை உயரதிகாரிகள், காவலர்கள், ஐஆர்பிஎன் காவலர்கள், ஊர்க்காவ லர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் உள்ளிட்டோர் அவர்களது ஊதியத்துக்கேற்ப ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை பொருட்களை வாங்க முடியும். இதற்கென தனியாக அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT