தமிழகம்

தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி கோரலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் அனுமதி கோரலாம் என்றும் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்கு அதற்கு தடையாக இருக்காது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆண்டு தோறும் விஜய தசமி நாளன்று நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத் தினர் காவல் துறையினரைப் போல் ஆடை அணிந்து பேரணி செல்வ தால் அதற்கு தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பேரணி நடத்த அனுமதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த இயக்கம் மனு தாக்கல் செய்தது. இதற்கு நீதிமன்றமும் அனுமதியளித்தது. இந்த சூழலில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இதற்காக ஆர்எஸ்எஸ் இயக் கத்தை சேர்ந்த துரை சங்கர் என்ப வர் தாக்கல் செய்த பதில் மனுவில், “ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் சென் றாண்டு பேரணி சென்றபோது எந்த வன்முறையிலும் ஈடுபட வில்லை. அவர்கள், காவல் துறை யினரைப் போல் லத்தி ஏதும் வைத் திருக்கவில்லை. இசைக் கருவி களைத்தான் ஆர்எஸ்எஸ் இயக் கத்தினர் வைத்திருந்தனர். எனவே, எங்கள் பேரணிக்கு தடை கோரும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, கே.கே.சசி தரன் அமர்வின் முன் விசா ரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “புதிதாக பேரணி நடத்த அனுமதி கேட்பதற்கு ஏற்கெனவே உள்ள வழக்கு தடை யாக இருக்காது. அந்த கோரிக்கை தொடர் பாக சட்டத்துக்கு உட்பட்டு காவல் துறை முடிவெடுக்கலாம்” என்று உத்தரவிட்டனர்.

          
SCROLL FOR NEXT