அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை ஜன.13-ம்தேதியுடன் முடிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, தலா 20 கிராம் உலர் திராட்சை மற்றும் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒருமுழு கரும்பு, துணிப்பை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத்
தொகுப்புடன் ரூ.2,500 வழங்கப்படும் என்று சேலத்தில் முதல்வர் அறிவித்ததை அடுத்து, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, இத்திட்டத்தை கடந்த 21-ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார்.
நியாய விலைக்கடைகளில் வரும் ஜன.4-ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.இதை முன்னிட்டு உணவுப்பொருள்
வழங்கல் துறை ஆணையர் சஜ்ஜன்சிங் சவான், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொங்கல் பரிசுத் தொகை, தொகுப்பு ஆகியவற்றை அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் உரிய முறையில் விநியோகம் செய்
யும் முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியர்களைச் சேரும். விநியோகப் பணியை ஜன.4-ல் தொடங்கிஜன.12-க்குள் முடிக்க வேண்டும்.
விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜன.13-ம் தேதி வழங்கி முழுமையாக முடிக்கவேண்டும்.
பொங்கல் பரிசுத் தொகை, தொகுப்பை பெற பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளுக்கு ஒரேநேரத்தில் வருவதைத் தவிர்க்க, தெருவாரியாக உள்ள குடும்பஅட்டை எண்ணிக்கை அடிப்படையில் சுழற்சி முறையில் வழங்க வேண்டும். ஒரு நாளில் காலை 100
மாலை 100 என 200 குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் வகையில், தேதி, நேரம் குறிப்பிட்டு, வரும் டிச.26 முதல் 30-ம் தேதி வரை டோக்கன்வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத்தொகை, தொகுப்பு ஆகியவற்றை ஒரே நேரத்தில் வழங்க வேண்டும்.
மாநகராட்சிகளில், விநியோகத்துக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500-ஐ ரூ.2 ஆயிரம்மற்றும் ரூ.500 நோட்டு அல்லது ரூ.500 நோட்டுகள் 5 என்ற வகையில்வழங்க வேண்டும். எந்த குடும்ப அட்டைதாரரையும் பொருள், பணம் இல்லை என்றுதிருப்பி அனுப்பக் கூடாது. ஆண்கள், பெண்கள் தனித்தனியாக வரிசையில் வரும் வகையிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு வரிசையின்றி முன்னுரிமை அளித்தும் பொருட்களை வழங்க வேண்டும். பொருட்கள் விநியோக முறை
குறித்து தெளிவாக விளம்பரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளுக்கு ஒரேநேரத்தில் வருவதைத் தவிர்க்க, தெருவாரியாக உள்ள குடும்ப அட்டை எண்ணிக்கை அடிப்படையில் சுழற்சி முறையில் வழங்க வேண்டும்.